சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
13 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டிய இக்கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் கார்த்திக், தனது வார்டில் மெட்ரோ வாட்டர் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சரிவர வேலை செய்வதில்லை என்றும், தரைவழி மின் கேபிள்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு மண்டல குழு தலைவர் முறையாகப் பதிலளிக்காததால் கூட்டத்திலிருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர், டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.