வறுமையில் வாடும் சொந்த நாட்டு மக்களைப் பிச்சைக்காரர் வேடம் போட்டவர்கள் என்று பேசிய கியூபா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்டா எலினா, கியூபாவில் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் வேஷம் போட்டவர்கள் எனவும் கூறினார்.
சிலர் கண்ணாடி துடைக்கும் வேலை செய்து அந்த பணத்தை மது வாங்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.
மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்பட்ட நிலையில், அதிபர் மிகுவல் டியாஸ்யிலின் உத்தரவின் படி, மார்டா எலினா ராஜினாமா செய்துள்ளார்.