தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தயாராகி வருகிறது.
சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே தென் சீனக் கடல் பகுதியில் பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, கடல் எல்லைகள் மற்றும் வளங்கள் பகிர்வதில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
எப்பொழுது வேண்டுமானாலும் சீனா தாக்கலாம் என்பதால் கடற்படை, ராணுவம், விமானப்படை என முப்படை வீரர்களும் தயார்நிலையில் உள்ளனர்.