அமெரிக்காவில் தாயுடன் சேர்ந்து நீந்தி சென்று மீன்களை வேட்டையாடும் குட்டி டால்பினின் வீடியோ வெளியாகியுள்ளது.
பாலுாட்டி வகை உயிரினமான டால்பினில், 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நிலையில், புளோரிடாவின் கிளியர்வாட்டர் அருகே உள்ள கடற்கரையில் தாய் டால்பினும், குட்டியும் ஒரு மீன் கூட்டத்தை வேட்டையாடின. இதுகுறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.