ஈராக்கில் வணிக வளாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.
வாசிட் மாகாணம் குட் நகரில் கடந்த வாரம் 5 மாடி வணிக வளாகம் திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்ததால், 69 பேர் உயிரிழந்தனர்.