சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 25 கிடா, 400 நாட்டுக் கோழிகளுடன் கமகம கறி விருந்து வைத்து பொதுமக்களைத் தொழிலதிபர் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
மருங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ், தொழில் நிமித்தமாகக் காரைக்குடியில் குடியேறினார்.
இந்நிலையில் சூரக்குடி ரோட்டில் தனது வீடு அருகே உள்ள ஓட்டநாலி முனீஸ்வரர் கோயிலில், தான் குடி புகுந்த ஊருக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் 25க்கும் மேற்பட்ட கிடாய்கள் மற்றும் 400 நாட்டுக் கோழிகளுடன் அசைவ விருந்து தயார் செய்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விருந்தளித்து மகிழ்ந்தார்.