காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இளைஞரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராபேட்டையை சேர்ந்த ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், ரஞ்சித்துக்கு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மாரியப்பன், ஐயப்பன் ஆகியோர் அதிக பணிசெய்யக்கூறி அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிலிருந்துவந்த ரஞ்சித், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், காவல்நிலையம் எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர்.