நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் 3-வது நாளாக தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.
திருநெல்வேலி ராமையன்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது.
குப்பைக் கிடங்கில் வீசிய பலத்த காற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் 3-வது நாளாகத் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் புகை பரவியதால், அப்பகுதி மக்களுக்குச் சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.