நாமக்கல்லில் ஸ்டீல் பிளேட் லோடு ஏற்றி வந்த டிரெய்லர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகாவில் இருந்து ஸ்டீல் பிளேட் ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கொசவம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் வரதராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார்.
வள்ளிபுரம் அருகே உள்ள சாலையில் டிரெய்லர் லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் டயர் உரசியதில், திடீரென டயர் வெடித்தது.
இதனால் சாலையின் முன்னே சென்று கொண்டிருந்த எல்பிஜி டேங்கர் லாரி மீது மோதி டிரெய்லர் லாரி தலைகுப்புறாக கவிழ்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுதா மற்றும் அவரது மகள் சினேகா மீதும் டிரெய்லர் லாரி மோதியது. இதில் சினேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த சுதா, டிரெய்லர் லாரி ஓட்டுநர் வரதராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.