மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும் மேற்குவங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.