அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் சுமார் 9 மணி் நேரம் விசாரணை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். அவரை விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆனந்த், கண்ணன்,பிரபு, ராஜா சங்கர மணிகண்டன் ஆகிய 5 தனிப்படை காவலர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், அஜித்குமார் உள்ளிட்ட 5 பேர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக ஓட்டுனராக இருந்த தனிப்படை காவலர் ராமச்சந்திரனிடமும் விசாரணை நடைபெற்றது. இவர் அளித்த சாட்சியம் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.