திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூரில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மர்ம நபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து 8 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளியை கைது செய்யவும் வலியுறுத்தினர்.