இந்து, பவுத்தம் உள்ளிட்ட மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மாற்று மதத்தை சேர்ந்த நபர்கள் இந்துக்கள் எனக்கூறி எஸ்சி சான்றிதழ் பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தடுக்கும் விதமாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பிற மதத்தினர் எஸ்சி சான்றிதழை முறைகேடாக வைத்திருக்கும் பட்சத்தில் அது ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.