டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்லர் 77 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி20-யில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த 7ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 14 ஆயிரத்து 562 ரன்களுடன் முதல் இடத்திலும், பொல்லார்டு 13 ஆயிரத்து 854 ரன்களுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளனர்.