காஞ்சிபுரத்தில் விவித்திர சேத்திர மிலன் எனும் ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆர்எஸ்எஸ் சார்பாக தனியார் மண்டபத்தில், விவித்திர சேத்திர மிலன் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு RSS கோட்ட தலைவர் ராம ஏழுமலை, RSS மாவட்ட தலைவர் கோதண்டம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாரதத்தின் பெருமைகள், கலாச்சாரம், பண்பாட்டை காப்பது குறித்து தொண்டர்களிடம் எடுத்துரைத்தார். இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.