சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பாஜகவினர் ரத்த தான முகாமை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆடிட்டர் ரமேஷின் உருவப் படத்திற்கு பாஜகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே மரவனேரி பகுதியில் பாஜக நிர்வாகிகள் ரத்த தான முகாமை நடத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.