வேலூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கும், அருகே உள்ள கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேல்மொனவூர் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கும் அதே பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேல்மொனவூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரை, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்த கிராமத்தினர், மறுவாழ்வு மையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர்.