மயிலாடுதுறையில் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்த காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் பிரவீன்பாபு, அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு உள்ளிட்ட போலீசார் அவர்களை கடுமையாக தாக்கினர்.
இது தொடர்பான வழக்கு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் சிங்காரவேலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உம்முல் பரிதா உத்தரவ. உரிய விளக்கத்துடன் சிங்காரவேலு ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்த நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.