அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 3, 2025, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும்  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்கள் (POSH – Internal Complaint Committees) அமைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதிலும், தங்கள் கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்கள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிவிக்கக் கூட கிட்டத்தட்ட 113 அரசுக் கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன. மேலும், உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசுக் கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகாரே பதியப்பட்டுள்ளது. அவையும் “சமாதானமாக” முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற POSH விதிமுறை உள்ள போதிலும், அரசுக் கல்லூரிகளிலேயே புகார் குழுக்களை அமைக்காமல் இருப்பது திமுக அரசுக்கு சட்டம் மீதும் சரி, சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சரி அக்கறை இல்லை என்பது தெளிவாக வெளிப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காவல் நிலையங்களில் பாலியல் புகார்களை அளிக்கும் போது ஏவல்துறை கொண்டு அச்சுறுத்திவந்த திமுக அரசு, தற்போது குற்றங்களே நடைபெறவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களையே அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதா என்ற கேள்வியும் வலுவாக எழுகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு திமுக உடன்பிறப்பால் நிகழ்ந்த வன்கொடுமையைக் கண்டு தமிழகமே கொதித்தெழுந்த பின்பும், கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பிற்கென செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூட  அறிவாலய அரசு செய்யத் தவறியுள்ளது மிகக் கொடுமையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்களைத் திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendraninternal complaint committees in government colleges.sexual harassment complaints
ShareTweetSendShare
Previous Post

நிஃபா வைரஸ் பரவல் குறித்து அச்சம் வேண்டாம் – கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்!

Next Post

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

Related News

திருப்பூர் : குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

தசரா திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

வரலாற்று சாதனை படைத்த ரசீத் கான்!

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆம்பூர் : டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் – மக்கள் எச்சரிக்கை!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் – சின்னர், முசெட்டி காலிறுதிக்கு தகுதி!

குன்னூர் ரயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies