திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அண்மையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே மேலும் ஒரு 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் 7-ம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். கடந்த வாரம் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாத நிலையில், மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.