கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாமென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நிஃபா வைரஸ் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என தெரிவித்தார். மேலும் அறிவியல் நெறிமுறைகளின் படி, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவாகவும் வீணா ஜார்ஜ் கூறினார்.