ஆள் கடத்தல் புகாரில் சென்னை மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் சேர்ந்த ரமேஷ் என்பவரின் நிலத்தினை ரூபாய் 16 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு 50 லட்சம் ரூபாய் மட்டும் தந்து விட்டு மீதி பணத்தை தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
அதனை கேட்ட நிலத்தின் உரிமையாளர் ரமேஷை ஆட்கள் வைத்து கடத்தி மண்டல அலுவலகத்தில் வைத்து கடுமையாக தாக்கியதாக மண்டல குழு தலைவர் ஆறுமுகம் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் அவரது சகோதரர் முருகன், திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் மீது பணம் மோசடி, ஆள் கடத்தல் கொலை மிரட்டல் விடுத்தல், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் கடுமையாக தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.