மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த முதியவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து காலை 8 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 7.30 மணிக்கே உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், 60 வயது முதியவர், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைக் கண்ட மீனவர்கள், முதியவரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு முதியவர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக முதியவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.