நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, எல்.முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.