பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வின் முதல் சுற்றில், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய 30 ஆயிரத்து 552 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று, சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வில் ஏ.ஐ. மற்றும் தரவு அறிவியல் படிப்புகளுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.