திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
கோயிலின் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக, கூடுதலாக வரிசை அமைத்து கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.