திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
ஆடி மாதம் தொடங்கியதையொட்டி, புகழ்பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பெண்களுக்கு மங்கல பொருட்களை வழங்கிய சேகர் பாபு, சுவாமி தரிசனம் செய்தார்.