கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருக்கோவிலூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான மாதவன் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு சென்றார். அத்திப்பாக்கம் அருகே சென்றபோது காரின் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாதவனின் குடும்பத்தினர் சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமடைந்த ஆயதப்படை காவலர் மாதவன் உள்ளிட்ட 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.