காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஒரே நாளில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் 37 பேர் ராஃபாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டனர். இதன் மூலம் காசா போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,765-ஐ எட்டியுள்ளது. 1,40,485 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா மனிதாபிமான அறக்கட்டளையில் உணவு பெற காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.