கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணமடைந்தார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் அல் சவுத், கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.
இதனையடுத்து அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் வாலீத் அல் சவுத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.