கிட்னி விற்பனை செய்ததற்காக 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், விசைத்தறி தொழிலாளி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து கிட்னி பெறப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிட்னி விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆடியோவில் பேசும் நபர், தனக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கிடைத்த பணத்தை கொண்டு தான் பெற்ற கடன்களை அடைத்ததாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே விசைத்தறி தொழிலாளர்களை மூளை சலவை செய்து சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபடுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் பாமகவினர் புகார்மனு அளித்தனர்.
மேலும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.