தமிழக கோயில்களின் வரவு செலவு கணக்கை அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என இந்து முன்னணியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகத்தில் இரண்டாயிரம் கோயில்களில் குடமுழுக்கு செய்ததாக தெரிவித்து வரும் அமைச்சர் சேகர்பாபு கோயில்களின் வரவு செலவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவ என வலியுறுத்தினார்.
முகலாய ஆட்சியின் உண்மை நிலையை பாட புத்தகத்தில் சேர்த்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.