ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொரு நபருடன் நெருங்கி பழகிய காதலியை, , அவரது காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் மேவளூர்குப்பத்தில் தோழிகளுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இந்நிலையில் சவுந்தர்யா வேறொரு நபருடன் பழகி வந்ததாகவும், இதனை அறிந்த தினேஷ் பலமுறை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, தினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுந்தர்யாவை குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் நாகை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.