ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இதனால் அங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.