80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி - ஆய்வில் புதிய தகவல்!
Oct 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய மிகப்பெரிய ஆறுகளின் அடையாளங்களை  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  பண்டைய ஆறுகள் மெதுவாக அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் தடயங்களையும் கண்டறிந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இனி பார்க்கலாம்.

பூமியின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அண்டார்டிகா, உலகின் தென் துருவம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியவெப்பம் மிகக் குறைந்த அளவே, இந்தக் கண்டத்தில் வந்து சேர்கிறது. அண்டார்டிகாவுக்குப்  புவியியல் ரீதியாக நிரந்தர எல்லைகள் அல்லது நிலையான அளவு கிடையாது. உலகின்   ஐந்தாவது பெரிய கண்டமாக இருந்தாலும், அதன் சரியான அளவு பருவக் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.

கோடையில், அமெரிக்காவின் அளவில் பாதியாக இருக்கும் அண்டார்டிகாவின் பரப்பளவு, குளிர்காலத்தில் இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். அண்டார்டிகாவின் நிலப்பரப்பில் 98  சதவீதம் பனியால் மூடப்பட்டுள்ளது. மேலும் உலகின் மொத்த நன்னீரில் சுமார் 70 சதவீதம் அண்டார்டிகாவில் உறைந்துள்ளது.

அண்டார்டிகாவில் நிரந்தரமாக யாரும் முழுநேரமாக வசிப்பதில்லை. எனவே அண்டார்டிகாவில் எந்த நாடுகளும் இல்லை. அரசுகளும்  இல்லை. ஒரு சிறப்பு சர்வதேச ஒப்பந்தத்தின் படி,  அமைதியான நோக்கத்துக்காக அண்டார்டிகாவை எந்த நாட்டைச் சேர்ந்த மக்களும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல நாடுகளின் விஞ்ஞானிகள் மட்டுமே அண்டார்டிகாவில்  தங்கிச் செல்கிறார்கள். அண்டார்டிகாவில் 60 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்குகின்றன. இந்த ஆராய்ச்சி நிலையங்களின் சுமார் ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் இருக்கின்றனர்.

அண்டார்டிகாவில், பண்டைய ஆறுகள் விட்டுச் சென்ற செதுக்கல்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை Nature Geoscience இதழில் வெளியிட்டுள்ளனர். அதன்படி கிழக்கு அண்டார்டிகாவில் 80 மில்லியன் முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டிக்கு அடியில் பெரிய, தட்டையான மேற்பரப்புகள் உருவாகின என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கால நிலை மாற்றம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில், பனிக்கட்டி எவ்வளவு உருகக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க, மற்றும் பனிக்கட்டியின் அடிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பண்டைய மேற்பரப்புகள் உருவானது எப்படி  என்பதையும், பனிக்கட்டியின் ஓட்டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு என்ன?  இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வு உதவியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டறிந்த தட்டையான மேற்பரப்புகள் 30 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பீட்டளவில் அப்படியே உயிர்வாழ இருந்ததாகவும், இதனால், பனிப்பாறையின் நிலப்பரப்பை அரிப்பதற்குப் பதிலாகப் பாதுகாத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கிழக்கு அண்டார்டிக் கடற்கரையின் 3,500 கிலோமீட்டர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், பல இடங்களில் தட்டையான விரிவுகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதாவது, கிழக்கு அண்டார்டிக் பனிப்படலம் விரிவடையும் போது உருகும் நீரால், பள்ளங்கள் உருவாகியதாகக் கூறும் ஆய்வறிக்கை, கிழக்கு அண்டார்டிக் கடற்கரை இருப்பதற்கு முன்பே உருவாகியுள்ளதாக உறுதிப் படுத்தியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, அண்டார்டிகாவை மையப்படுத்தி நடக்கும் ஆய்வுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: A river flowed in Antarctica 80 million years ago - new information in the studyஅண்டார்டிகாஅண்டார்டிகாவில் நதி80 மில்லியன் ஆண்டுபூமியின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அண்டார்டிகாAntarctica NEWS
ShareTweetSendShare
Previous Post

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Next Post

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

Related News

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies