பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!
Sep 2, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வரும் இந்த தீ விபத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் ராமையன்பட்டி அரசுக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நாள் தோறும் 180 முதல் 200 டன் குப்பைகள் கொட்டப்படும் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பரவி வானை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள ராமையன்பட்டி, தச்சநல்லூர், மானூர் ரஸ்தா ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாளையங்கோட்டை ஜங்சன், டவுன் மற்றும் பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பைக் கிடங்கில் பரவும் தீயை முழுமையாகக் கட்டுப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் புகை மூட்டத்தால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விடுவதற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தீ விபத்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பும் தொடர்கதையாகி வரும் நிலையில், தீயை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைக் கிடங்கில் தீ பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமுறை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாள்தோறும் பரவும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் மக்கள் தங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிப்பதோடு, இதுபோன்ற தீ விபத்துக் காலங்களில் அவற்றை உடனடியாக அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பாளையங்கோட்டை ஜங்சன்டவுன்திருநெல்வேலிBurning garbage dump: People suffocating due to respiratory problemsமூச்சு திணறும் மக்கள்எரியும் குப்பை கிடங்கு
Share
Tweet
SendShare
Previous Post

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Next Post

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

Related News

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies