டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய ரோபோ ஒன்று, விருந்து நிகழ்ச்சிக்காக பாப்கார்ன் பரிமாறும் வீடியோ வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மனிதர்களைப் போன்ற ரோபோக்களை உருவாக்கி வருகிறது. இது ஆப்டிமஸ் என்று அழைக்கப்படுகிறது.
வீட்டை சுத்தம் செய்தல், தோட்டம் அமைத்தல் போன்ற வேலைகளைச் செய்ய இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், தொழிற்சாலைகள் மற்றும் பிற பணிகளிலும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.