நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே புலி ஒன்று சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற வீடியோ வைராலாகி வருகிறது.
மாயார் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலியைச் சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். இதனிடையே வன விலங்குகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனச் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.