சிவகங்கையில் 60 வயது முதியவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 மணி நேர தேடுதலுக்குப்பின், துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் கண்டெடுத்தனர்.
திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து என்ற முதியவர். தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 5 மணி நேரத் தேடுதலுக்குப்பின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டெடுத்தனர்.
மேலும், முதியவரைக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.