ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சிறுமி விவாகரத்தில் நீதி கேட்டு பாமக நிர்வாகி திலகபாமா தலைமையில் அக்கட்சியினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாமகவினரைத் தடுத்து நிறுத்தி சமரசம் மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திலகபாமா, குற்றம் நடந்து பத்து நாட்களை கடந்தும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யப்படவில்லை என்றும், பல்வேறு புகைப்படங்களைக் கையில் வைத்துக் கொண்டும் காவல்துறையினர் தாமதம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
சிறுமிக்கு உரிய கவுன்சிலிங் கூட முறையாக வழங்கவில்லை எனவும் கூறினார். மேலும், காவல்துறையின் விளக்கத்தைக் கேட்ட பின்னரே அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என திலகபாமா தெரிவித்தார்.