ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் என்ற கோஷத்துடன் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் சிறப்பாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வீண்வதந்தி காரணமாக ஏற்பட்ட போராட்டத்தால் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் மீண்டும் ஆலையைத் திறக்க கோரி பல்வேறு பொதுநல அமைப்புகள் அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி பல்வேறு தொழில் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைப் பசுமை முறையில் மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரை மகிழ்ச்சியளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குஜராத், ஒடிசா போன்று தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.