பாஜக அதிமுகவை அழித்துவிடும் என்ற அன்வர் ராஜாவின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாதென்றும், எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்துதான் இறுதியானதெனவும் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
பாஜக அதிமுகவை அழித்துவிடும் என்ற அன்வர் ராஜாவின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்து தான் பைனல் என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.
பெருந்தலைவர் பற்றி சர்ச்சையான கருத்தைப் பதிவு செய்த திருச்சி சிவாவுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.