தென்காசியில் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை zoho மென்பொருள் நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்.
தென்காசியில் சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் மற்றும் Strat up Tenkasi இணைந்து தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை நடத்துகிறது.இந்த கண்காட்சியை zoho மென்பொருள் நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், ஸ்டார்ட் அப் தென்காசியால் உருவாக்கப்பட்ட மருந்து தெளிக்கும் ட்ரோன்களையும் ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டார். முன்னதாக கொற்றவை குழுவினர் வழங்கிய கைச்செயினை ஸ்ரீதர் வேம்பு நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.