ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வழக்கில் சிசிடிவி-யில் பதிவான குற்றவாளியின் புகைப்படம் தெளிவாக தெரியாத நிலையில், ஏ.ஐ மூலம் மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ள மாவட்ட காவல்துறை, சரியான தகவல் அளிக்கும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.