போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை கைது செய்யாமல் இருக்க போலீசார் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக சப்ளையர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதீப் வாக்குமூலத்தில் கூறிய நபர்களை கைது செய்யாமல் இருக்க போலீசார் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் அருள்மணி, ராமகிருஷ்ணன் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.