நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடு முழுவதும் வங்கி மோசடிகள் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் அதிகரித்துள்ளதா என எழுதப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியிடம் உள்ள தகவலின்படி 2023-2024-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 473 வங்கி மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முந்தைய நிதியாண்டை விட வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 293 வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தனது எழுத்துப்பூர்வ பதிலில் விளக்கம் அளித்துள்ளார்.