மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக பேக்கரி கடையில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்து சென்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் கொடுத்த தகவலின்பேரில் பேக்கரிக்கு 2-வது முறையாக சென்ற சிபிஐ அதிகாரிகள், பேக்கரி உரிமையாளரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.