திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் எதிரொலியாக, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அருகே நடந்து சென்ற 10 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போதிய மின்விளக்குகள் இல்லை எனக் கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 20 மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.