கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியைக் கொலை செய்த கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஷ்ரூத்- ஸ்ருதி தம்பதி இடையே குடும்ப பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்பட்டது.
இதில் காயமடைந்த ஸ்ருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற விஷ்ரூத், ஸ்ருதியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டுத் தப்பியோடினார்.
தொடர்ந்து குளித்தலை காவல்நிலையத்தில் அவர் சரணடைந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.