ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசின் சேவைகள் எதுவும் கிடைப்பதில்லை எனவும் அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், அவர்களது கடமையைச் செய்யத் தவறுவதாகப் புகார் தெரிவித்தனர்.